வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (15:10 IST)

தன்னுடைய ரயில்வே பதவியை ராஜினாமா செய்த வினேஷ் போகத்!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத எடை கூடுதலாக இருந்த காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட வேண்டும் என சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பாக வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அவர் மல்யுத்த வாழக்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் இந்தியா திரும்பிய அவருக்கு அமோகமான வரவேற்புக் கிடைத்தது. இந்நிலையில் அவர் தற்போது காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் அவர் மற்றொரு குத்துச்சண்டை வீரான பஜ்ரங் புனியாவோடு இணைந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்ததில் இருந்து இந்த கருத்து எழுந்துள்ளது.

இந்நிலையில் வினேஷ் போகத் தான் வகித்து வந்த ரயில்வே பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் அவர் காங்கிரஸில் இணையவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.