வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 8 செப்டம்பர் 2019 (07:19 IST)

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரினா வில்லியம்ஸை வீழ்த்திய 19 வயது இளம் வீராங்கனை

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த சில நாட்களாக நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் நிலையில் நேற்று இந்த தொடரின் கிளைமாக்ஸ் போட்டியான இறுதிப்போட்டி நடைபெற்றது
 
 
நேற்றைய இறுதிப்போட்டியில் 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் மற்றும் கனடாவை சேர்ந்த 19 வயது இளம் வீராங்கனை பயன்கா ஆண்ட்ரிஸ்கு ஆகியோர் மோதினர்.  இந்த போட்டியில் பயன்கா ஆண்ட்ரிஸ்குவின் புயல் வேக ஆட்டத்திற்கு செரீனாவால் ஈடுகொடுக்க முடியவில்லை. 
 
 
முதல் செட்டை பயன்கா ஆண்ட்ரிஸ்கு 6-3 என்ற செட்களில் மிக எளிதாக கைப்பற்றினாலும், இரண்டாவது செட்டை அவ்வளவு எளிதில் அவரால் கைப்பற்ற முடியவில்லை. கடும் போராட்டத்திற்கு பின் 7-5 என்ற கணக்கில் செரீனாவை வீழ்த்தி பயன்கா ஆண்ட்ரிஸ்கு அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் ஆனார். 
 
 
அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் பெறும் முதல் கனடா வீராங்கனை என்ற பெருமை பயன்கா ஆண்ட்ரிஸ்கு அவர்களுக்கு கிடைத்துள்ளது. அனுபவம் வாய்ந்த பலமான செரீனாவை வீழ்த்திய 19 வயது இளம் வீராங்கனை பயன்கா ஆண்ட்ரிஸ்கு அவர்களுக்கு கனடா பிரதமர் உள்பட பல தலைவர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர்