ஒரே போட்டியால் அதள பாதாளத்தில் வீழ்ந்து; பிழைப்பிற்கு கடை நடத்தும் இலங்கை கிரிக்கெட் வீரர்!!


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (19:49 IST)
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் உபுல் சந்தனா விளையாடிய ஒரு கிரிக்கெட் போட்டி அவரது வாழ்க்கையை பாதாளத்தில் வீழ்த்து தற்போது கடை வைத்து பிழைப்பை நடத்தி வருகிறார்.

 
 
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு இணையாக சுழற்பந்து வீச்சில் கலக்கியவர் உபுல் சந்தனா.
 
1994 ஆம் ஆண்டு, இலங்கைக்காக தனது முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கினார். 2007 வரை அவர் இலங்கைக்காக விளையாடியுள்ளார். 
 
ஆனால் அவர் பங்கேற்ற ஒரு கிரிக்கெட் போட்டி அவரது வாழ்க்கையை நரகமாக மாற்றியது. ஐசிஎல் எனப்படும் இந்தியன் கிரிக்கெட் லீக் போட்டிகளில், ராயல் பெங்கால் டைகர்ஸ் அணிக்காக விளையாடினார்.

ஐசிஎல்-க்கு சர்வதேச கிரிக்கெட் சங்கம் மற்றும் இந்திய கிரிக்கெட் சங்கம் அங்கீகாரம் அளிக்கவில்லை. எனவே, சந்தானா கிரிக்கெட் தொடர்களில் விளையாட இலங்கை கிரிக்கெட் சங்கம் தடை விதித்தது.
 
இதனால், தற்போது பிழைப்பிற்காக கிரிக்கெட் தொடர்புடைய பொருட்களை விற்கும் கடையை நடத்தி வருகிறார். 
 


இதில் மேலும் படிக்கவும் :