செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 11 மே 2022 (07:58 IST)

ஐபிஎல் 2022: டெல்லி-ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

RR vs DC
ஐபிஎல் 2022: டெல்லி-ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்
ஐபிஎல் தொடர் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
புள்ளி பட்டியலை பொறுத்தவரை ராஜஸ்தான் அணி 14 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது இன்றைய போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்று விட்டால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற அதிக வாய்ப்பிருக்கிறது
 
ஆனால் அதே நேரத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றால் 12 புள்ளிகளுடன் அதே ஐந்தாவது இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தால் தான் சென்னை உள்பட ஒரு சில அணிகளுக்கு அடுத்த சுற்று செல்லவாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது