புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (08:11 IST)

இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரிட்சை: 5 ஆண்டுகளுக்கு பின் மோதுவதால் பரபரப்பு

உலகக் கோப்பை டி20 போட்டியில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. துபாயில் நடைபெற உள்ள இந்த போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் டி20 போட்டியில் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதும் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்தியா பாகிஸ்தான் இடையே கடைசியாக நடைபெற்ற ஐந்து டி20 போட்டிகளில் நான்கு முறை இந்தியா வென்றுள்ளது என்பது ஒரே ஒருமுறை பாகிஸ்தான் வென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியிலும் இந்தியா தொடர் வெற்றியை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்