1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 7 டிசம்பர் 2022 (08:08 IST)

7 பதக்கங்களுடன் நாடு திரும்பிய தமிழக வீராங்கனைக்கு குவியும் வாழ்த்துக்கள்!

amutha
7 பதக்கங்களுடன் நாடு திரும்பிய தமிழக வீராங்கனைக்கு குவியும் வாழ்த்துக்கள்!
7 பதக்கங்கள் மற்றும் இரண்டு விருதுகளுடன் நாடு திரும்பிய தமிழக வீராங்கனைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
நியூசிலாந்து நாட்டில் நடந்த காமன்வெல்த் பவர்லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 5 தங்கப் பதக்கள் உள்பட 7 பதக்கங்கள் வென்ற தமிழக வீராங்கனை அமுதா சுகந்திபாபு
 
அதுமட்டுமின்றி இவர் இரண்டு சிறந்த லிஃப்டர் விருதுகளையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 7 பதக்கங்கள் மற்றும் இரண்டு விருதுகளுடன் நாடு திரும்பிய தமிழக வீராங்கனை அமுதாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
 இந்தியா திரும்பியவுடன் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது பளுதூக்கும் வீராங்கனைகளுக்கு மத்திய மாநில அரசுகள் போதிய உதவி செய்வதில்லை என்றும் அவற்றை செய்ய வேண்டும் என்றும் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு அமைத்து தர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Siva