புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 3 மார்ச் 2022 (19:38 IST)

சுரேஷ் ரெய்னாவை கைவிட்டது குஜராத் அணி!

நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த அணியும் ஏலம் எடுக்காத சுரேஷ் ரெய்னாவை குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அந்த அணியும் கைவிட்டதாக வெளி வந்திருக்கும் தகவல் பரவியுள்ளது. 
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரராக இருந்த சுரேஷ் ரெய்னாவை அனைத்து அணிகளும் கைவிட்டதால் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அவர் இடம்பெறவில்லை. 
இதனை அடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்த தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் திடீரென அணியிலிருந்து விலகியதை அடுத்து அதற்கு மாற்று வீரராக சுரேஷ் ரெய்னா தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்பட்டது 
 
ஆனால் குஜராத் டைட்டன்ஸ் அணி சுரேஷ் ரெய்னா ஏலம் எடுக்கவில்லை என உறுதிபட தெரிவித்துள்ளது. இதனை அடுத்து சுரேஷ் ரெய்னா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்