வியாழன், 5 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 நவம்பர் 2019 (12:48 IST)

விவரம் தெரியாம பேசாதீங்க விராட் கோலி! – கவாஸ்கர் பதில்!

கங்குலி காலத்தில்தான் இந்தியா வெற்றிபெற தொடங்கியது என கேப்டன் கோலி பேசியதற்கு பதிலளித்துள்ளார் சுனில் கவாஸ்கர்.

வங்கதேசத்தோடு விளையாடிய டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா வொயிட் வாஷ் வெற்றியை பெற்றது. வெற்றிபெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி “இந்திய அணியின் வெற்றி சவுரவ் கங்குலி காலத்தில்தான் தொடங்கியது” என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ”இந்திய அணி கங்குலிக்கு முன்பே பல டெஸ்ட் போட்டிகளில் வெற்றிப்பெற்றுள்ளது. பிசிசிஐ தலைவர் கங்குலியை புகழ்வதற்காக கேபடன் விராட் கோலி அப்படி பேசியிருக்கலாம். பலர் கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றி 2000க்கு பிறகு தோன்றியதாக நினைக்கிறார்கள். ஆனால் 1970களில் இருந்தே இந்தியா பல தொடர்களை சமன் செய்திருக்கிறது. அப்போதெல்லாம் விராட் கோலி பிறக்கக்கூட இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.