1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 30 ஜூலை 2023 (19:34 IST)

ஓய்வு பெறுவதாக அறிவித்தார் இங்கிலாந்து வீரர்..யுவராஜ் சிங் புகழாரம்!

பிரபல இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் தனது ஓய்வை அறிவித்துள்ள நிலையில் அவருக்கு முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் புகழாரம் சூட்டியுள்ளார் 
 
ஆஷஸ் தொடரின் கடைசி போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டுவர்ட் பிராட் அறிவித்துள்ளார். 
 
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக இருந்த இவர் ஓய்வு முடிவை அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
என் வாழ்வின் 17 வருட கிரிக்கெட் பயணம் மிகச்சிறந்த அனுபவமாக அமைந்துள்ளது என்றும் எப்போதும் இங்கிலாந்து அணியின் ஜெர்சியை அணிவதை பெருமையாக கருதி உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
இந்த ஆஷஸ் தொடரை மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.  இந்த நிலையில் ஓய்வை அறிவித்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டுவர்ட் பிராடுக்கு இந்திய வீரர் யுவராஜ் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.
 
 
 
Edited by Siva