1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 13 அக்டோபர் 2022 (13:50 IST)

மகளிர் ஆசிய கோப்பை: டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு!

sl vs pak
மகளிர் ஆசிய கோப்பை: டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு!
கடந்த சில நாட்களாக மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது 2வது அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் தற்போது அந்த அணி பேட்டிங் செய்து வருகிறது. சற்றுமுன் வரை 11 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்களை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த போட்டியில் வெல்லும் அணி இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதும் என்பதால் இந்த போட்டி விறுவிறுப்பாக உள்ளது. மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் இந்தியா உடன் மோதும் அணி எது என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva