ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 20 அக்டோபர் 2022 (13:00 IST)

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: இலங்கை அபார வெற்றி!

sri vs neth
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: இலங்கை அபார வெற்றி!
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் பயிற்சி ஆட்டங்கள் மற்றும் தகுதிச்சுற்று போட்டிகள்தற்போது நடைபெற்று வருகின்றன
 
இந்த நிலையில் இன்று இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது
 
இந்த போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்த 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் மெண்டிஸ் மிக அபாரமாக விளையாடி விளையாடிய 79 ரன்கள் அடித்தார்
 
அதன்பின் 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இருப்பினும் தொடக்க ஆட்டக்காரர் மேக்ஸ் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் புள்ளி பட்டியலில் இலங்கை தற்போது 4 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran