முதல் ஒருநாள் போட்டி: 2 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து இந்தியா திணறல்

Last Modified ஞாயிறு, 10 டிசம்பர் 2017 (11:57 IST)
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி, டெஸ்ட் தொடரை 0-1 என்ற கணக்கில் இழந்த நிலையில் இன்று தர்மசாலாவில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது.

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இலங்கை அணியின் அனல் பறக்கும் பந்துவீச்சில் தொடக்க ஆட்டக்காரரும் இந்திய அணியின் கேப்டனுமாகிய ரோஹித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் தவான் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார்.

சற்றுமுன் வரை இந்திய அணி ஐந்து ஓவர்களில் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து தத்தளித்து வருகிறது. விராத் கோஹ்லி இல்லாத இந்திய அணியை தனது அபாரமான பந்துவீச்சால் இலங்கை திணறடித்து வருவதாக வர்ணனையாளர்கள் கூறி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :