செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (16:35 IST)

சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து ஸ்பெயின் வீரர் செஜியோர் ரமோஸ் ஓய்வு

football
சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஸ்பெயின் வீரர் செஜியோர் ரமோஸ்.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர்,சர்கியோ ரமோஸ் கார்சியா. இவர், தன் சிறு வயதில், 1996-2003 ஆகிய ஆண்டுகளில், சில்விய அணிக்காக விளையாடினார்.

அதன்பின்னர், இளைஞராக இருந்தபோது, 2003-2004 ஆகிய ஆண்டுகளில்  செல்வியா அட்லெட்டிக்கோ அணிக்காக 26 போட்டிகளில் விளையாடி2 கோல்கள் அடித்தார்.

அதன்பின்னர், 2004- 2005 ஆகிய ஆண்டுகளில் சில்வியா அணிக்காக 39 போட்டிகளில் விளையாடி 2 கோல்கள் அடித்தார்.

2005 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை ரியல் மாட்ரிட் அணிக்காக 469 போட்டிகளில்  விளையாடி72 கோல்கள் அடித்திருந்தார்.

கடைசியாக பாரிஸ் செய்ன்ட் ஜெர்மன் அணியில், 33 போட்டிகளில் விளையாடி 2 கோல்கள் அடித்திருந்தார்.

ஸ்பெயின் நாட்டிற்காக இதுவரை 1 உலகக் கோப்பை, 3யூரோ கோப்பைகளை வென்றுள்ளவர் ஆவார்.

அவர் கால்பதில் இருந்து ஓய்வு பெற்றது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.