வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 28 டிசம்பர் 2021 (16:34 IST)

இரண்டாவது விக்கெட்டையும் இழந்த தென் ஆப்பிரிக்கா!

உணவு இடைவேளைக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா அணி தன்னுடைய இரண்டாவது விக்கெட்டையும் இழந்துள்ளது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 327 ரன்கள் எடுத்தது என்பதும் கேஎல் ராகுல் அபாரமாக விளையாடி சதம் அடித்தார் என்பதையும் பார்த்தோம் 

இந்த நிலையில் சற்று முன்னர் தென்ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது இந்த போட்டியின் முதல் ஓவரை பும்ரா வீசிய நிலையில் தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் அவுட் ஆனார். அவர் ஒரே ஒரு ரன்களில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து உணவு இடைவேளைக்கு பிறகு ஷமி பீட்டர்சனை ஆட்டமிழக்க செய்து இரண்டாவது விக்கெட்டைக் கைப்பற்றினார். தற்போது தென் ஆப்பிரிக்கா அணி 30 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.