புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 12 ஜனவரி 2022 (18:17 IST)

ஒரே ஓவரில் 2 விக்கெட்: 6 விக்கெட்டுக்களை இழந்தது தென்னாப்பிரிக்கா!

தென்ஆப்பிரிக்கா அணி ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்ததை அடுத்து மொத்தமாக 6 விக்கெட்டுகளை இழந்தது தத்தளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கேப்டவுன் நகரில் நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 223 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது என்பது குறிப்பிடதக்கது. 
 
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி தற்போது பேட்டிங் செய்து வரும் நிலையில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
குறிப்பாக ஷமி வீசிய 55 ஆவது ஓவரில் தென்ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி தற்போது 63 ரன்கள் பின்தங்கி உள்ளது