வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 10 ஜூன் 2022 (07:24 IST)

211 ரன்கள் குவித்தும் தோல்வி அடைந்த இந்தியா: தென்னாப்பிரிக்கா அபார பேட்டிங்!

sa target 212
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 211 ரன்கள் குவித்தும் பரிதாபமாக தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
நேற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. இஷான் கிஷான், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அபாரமாக விளையாடினார்
 
இருப்பினும் இந்த இலக்கை தென் ஆப்பிரிக்க அணி 19.1 ஓவர்களில் அடைந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்க அணியின் வான் டன் டூசன் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் அபாரமாக விளையாடினார் என்பதும் டேவிட் மில்லர் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த தொடரில் தென்னாபிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது