செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 19 ஆகஸ்ட் 2020 (09:44 IST)

தோனியிடம் பிரதமர் மோடி இந்த கோரிக்கையை வைக்கலாம்: ஷோயப் அக்தர் ஆலோசனை

தோனியிடம் பிரதமர் மோடி இந்த கோரிக்கையை வைக்கலாம்:
சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தல தோனி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்
 
இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் கேப்டன் தோனியை மீண்டும் 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாட பிரதமர் மோடி கோரிக்கை வைக்கலாம் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்
 
தோனி 2021 ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை தொடர் வரை விளையாடி இருக்கலாம் என்று நினைக்கின்றேன் என்றும் அவருடைய ரசிகர்களுக்கு அதுதான் சரியான முடிவாக இருந்து இருக்கும் என்றும் கூறியிருந்தார் 
 
மேலும் இப்போது கூட ஒன்றும் கெட்டுப் போகவில்லை என்றும் 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில் தோனி விளையாடுமாறு பிரதமர் மோடி கோரிக்கை விடுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார் 
 
ஏற்கனவே கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தா இம்ரான்கான் அதன்பின் பாகிஸ்தான் அதிபரின் வேண்டுகோளை ஏற்று உலக கோப்பையில் விளையாடி உலக கோப்பையை பாகிஸ்தானுக்கு பெற்று தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது