1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (16:23 IST)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரை இறுதிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் மிக அபாரமாக விளையாடி அரையிறுதிக்கு தகுதி பெற்றார் 
 
இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் செரீனா வில்லியம்ஸ் சிமோனா ஹாலெப் என்பவரை எதிர்த்து விளையாடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் சிமோனாவை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார் 
 
இந்த வெற்றியை அடுத்து ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரை இறுதிப் போட்டிக்கு செரீனா வில்லியம்ஸ் முன்னேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் ஆக வாய்ப்பிருப்பதாக பலர் கூறியுள்ள நிலையில் அவர் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார் என்பதும் இறுதிப்போட்டிக்கும் கண்டிப்பாக அவர் முன்னேறுவார் என்றும் கூறப்படுகிறது