அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரினா வில்லியம்ஸ் விலகுவதாக அறிவிப்பு
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து செரினா வில்லியம்ஸ் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது டென்னிஸ் ரசிகர்களுக்கு பெயர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது என்பது தெரிந்ததே. ஆண்கள் பெண்கள் ஆகிய இருபாலருக்கும் ஆன போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் காயம் காரணமாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார்
அவர் இந்த தொடரில் கலந்து கொண்டால் கண்டிப்பாக பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காயம் காரணமாக விலகியுள்ளது டென்னிஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது