நடராஜனை டெஸ்ட் தொடரிலும் சேர்க்கலாம் – சச்சின் ஆலோசனை!
இந்திய அணியில் தேர்வாகி கலக்கி கொண்டு இருக்கும் நடராஜனை டெஸ்ட் தொடரிலும் சேர்க்கலாம் என இந்திய முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். டெத் ஓவர்களில் யார்க்கர்களாக வீசி இந்த சீசனில் உலகின் சிறந்த வீரர்களான கோலி, டிவில்லியர்ஸ், தோனி உள்ளிட்ட பல வீரர்களின் விக்கெட்களை கைப்பற்றியுள்ளார் நடராஜன். இதையடுத்து இந்திய அணியில் இடம்பிடித்த நடராஜன் மூன்றாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கி 2 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார். அதன் பின்னர் நடந்த 3 டி 20 போட்டிகளிலும் விளையாடி 6 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

இதனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையும் இப்போது நடராஜன் வசம் திரும்பியுள்ளது. இந்நிலையில் அடுத்து வரும் டெஸ்ட் தொடரில் இஷாந்த் சர்மா இல்லாத நிலையில் அவருக்கு பதிலாக நடராஜனை அணியில் சேர்க்கலாம் என சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை செய்து வருகிறாராம்.