திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 14 நவம்பர் 2020 (13:11 IST)

ரோஹித் சர்மா உடற்தகுதியுடன் இல்லை ....பிசிசிஐ தலைவர் கங்குலி

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரோஹித் சர்மா முழு உடல் தகுதியுடன் இல்லை என  பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிமுக முறை டப் அவுட்டாகி கிரிகெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கண்டனங்களுக்கு ஆனானவர் ரோஹித் சர்மா.
இறுதிப்போட்டியில் தன் பழைய பார்முக்கு திரும்பி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று நடப்பு –ஐபிஎல்-2020 தொடரில் மும்பை அணி வெற்று கோப்பை வெல்லக் காரணமானவரும் அவர்தான்.

இருப்பினும் அவரது உடற்தகுதி குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.  பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதலில் இடம்பெறாத ரோஹித்,  கோலியின் மனைவி பிரசவத்திற்காக எதிர்நோக்கியுள்ள் நிலையில் தொடரிலிருந்து விலவே ரோஹித் சர்மா அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் ரோஹித் டெஸ்ட் போட்டியில் மட்டுமே இடம் பெற்றுள்ளார். ஒருநாள் மற்றும் டி-20 போட்டியில் அவர் இடம்பெறவில்லை.

இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியதாவது: ரோஹித் சர்மா 70 % உடல்தகுதியுடன் மட்டுமே இருக்கிறார். அதனால் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடுவார். ஒருநாள் மற்றும் டி-20 போட்டியில் விளையாட மாட்டார் எனத் தெரிவித்துள்ளார்.