வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 15 செப்டம்பர் 2021 (10:47 IST)

பவுல் அவுட் சுவாரஸ்யத்தைப் பகிர்ந்து கொண்ட ராபின் உத்தப்பா!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த முதல் டி 20 போட்டியில் இந்திய அணி பௌல் அவுட் முறையில் வென்றது.

இந்த போட்டி நடந்து இன்றோடு 14 வருடங்கள் ஆகின்றன. இந்த போட்டியில் பவுல் அவுட்டில் எதிர்பாராத விதமாக பந்து வீசி விக்கெட்டைக் கைப்பற்றிய ராபின் உத்தப்பா அந்த மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதில் ‘பௌல் அவுட் பற்றி டிரெஸ்ஸிங் அறையில் விவாதித்தோம். அப்போது நான் தோனியிடம் சென்று நான் பந்து வீசுகிறேன் எனக் கூறினேன். அவர் ஒரு கணம் கூட யோசிக்காமல் ‘நிச்சயமாக’ என்றார். நமக்கு நம் மீது நம்பிக்கை இருந்தால், அவர் கண்டிப்பாக அதை தடுக்க மாட்டார். அதுதான் கேப்டனாக அவரின் முதல் போட்டி. அவரின் தலைமைப் பண்புகளை அப்போதே நான் தெரிந்துகொண்டேன்’ எனக் கூறியுள்ளார்.