1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (08:03 IST)

பெயர் மாறுகிறதா ஆர் சி பி அணி? கோலி, டிவில்லியர் குழப்பம் !

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர் சி பி அணியின் பெயர் மாற்றப்படும் என சொல்ல்ப்படுகிறது.

திறமையான வீரர்கள் பலர் இருந்தும் கடந்த 13 சீசன்களில் ஆர் சி பி அணியால் ஒரு கோப்பையைக் கூட வெல்ல முடியவில்லை. எனவே ஆர்சிபியை ரசிகர்கள் ஐபிஎல்-ன் சோக்கர்ஸ் என வர்ணித்து வருகின்றனர். ஆனால் கோப்பையை வெல்லாவிட்டாலும் ஐபிஎல்-ன் மிகவும் அதிக ரசிகர்களைக் கொண்ட அணியில் அதுவும் ஒன்று.

இந்நிலையில் இந்த ஆண்டு தொடரில் பெங்களூர் அணியின் ஸ்பான்ஸராக முத்தூட் பின்கார்ப் நிறுவனம் மாற இருப்பதால் சமூக வலைதளங்களில் தங்கள் அணியின் பெயரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்பதில் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் என அணி நிர்வாகம் மாற்றியுள்ளது. மேலும் தங்கள் பழைய புகைப்படத்தையும் நீக்கியுள்ளது. இதைப்பார்த்த அணி வீரர்களான கோலி, சஹால் மற்றும் டிவில்லியர்ஸ் நம் அணிக்கு என்ன ஆச்சு? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.