புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 28 ஏப்ரல் 2021 (08:53 IST)

மீண்டும் முதலிடத்துக்கு வந்த ஆர் சி பி! இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்ட சி எஸ் கே!

நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ஆர் சி பி அணி மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளது.

இந்த ஆண்டு எதிர்பாராத விதமாக ஆர் சி பி அணி மிகவும் சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் உள்ளது. இதனால் சி எஸ் கே மற்றும் ஆர் சி பி அணிக்கு இடையே புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பது சம்மந்தமாக போட்டி நிலவி வருகிறது. நேற்றைய போட்டியில் டெல்லியை ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் 10 புள்ளிகளுடன் மீண்டும் முதல் இடத்துக்கு வந்துள்ளது ஆர் சி பி.