ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 4 ஆகஸ்ட் 2021 (16:26 IST)

இறுதிப்போட்டிக்கு தகுதியான இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா!

மல்யுத்த பிரிவில் இந்தியாவுக்காக விளையாடும் ரவிக்குமார் தாஹியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா இதுவரை இரண்டு பதக்கங்கள் மட்டுமே வென்றுள்ளது. இந்நிலையில் மல்யுத்தத்தில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் வெள்ளிப்பதக்கம் அவருக்கு உறுதியாகியுள்ளது. ஆனால் தங்கம் வெல்வதே லட்சியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.