திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 12 ஏப்ரல் 2021 (19:19 IST)

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த அதிரடி முடிவு

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த அதிரடி முடிவு
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டி சமீபத்தில் தொடங்கிய நிலையில் ஏற்கனவே மூன்று போட்டிகள் முடிவடைந்து இன்று 4வது போட்டி நடைபெற உள்ளது 
 
இன்றைய போட்டியில் ராயல் ராஜஸ்தான் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் ராயல் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து பஞ்சாப் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய ஆடும் 11 பேர் அணியில் இரு அணிகளிலும் உள்ள வீரர்கள் பின்வருமாறு:
 
ராஜஸ்தான் அணி: பட்லர், மனன் வோரா, பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், ரியான் பிராக், ஷிவம் டூபே, ராகுல் திவேட்டியா, கிறிஸ் மோரிஸ், ஸ்ரேயாஸ் கோபால், சேட்டன் சகாரியா, முஸ்டாபிசூர் ரஹ்மான்
 
பஞ்சாப் அணி: கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்லே, நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஷாருக்கான், ரிச்சர்ட்ஸன், அஸ்வின், ரிலே மெரிடித், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்