இனி சென்னை அணிக்கு ரெய்னா விளையாடவே மாட்டார்… குஜராத் அணிக்கு அவர்தான் கேப்டன்?
அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் ஒன்பதாவதாக ஒரு அணி சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் கொரோனாவால் தள்ளிப்போனாலும் மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. பல நூறு கோடி மக்கள் தொலைக்காட்சிமற்றும் டிஜிட்டல் மீடியாக்கள் போட்டிகளைப் பார்த்தனர். இந்நிலையில், அடுத்த வருடம் ஒரு புதிய ஐபிஎல் டீம் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த ஐபிஎல் அணியை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் வாங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே 8 அணிகள் உள்ள நிலையில் 2021 ஆம் ஆண்டில் 9 அணிகள் களமிறங்கவுள்ளதாகத் தெரிகிறது. இந்த அணி குஜராத்தை மையமாக வைத்து பெயர் சூட்டப்படும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ரெய்னா கேப்டனாக நியமிக்கப்படுவார் என சொல்லப்படுகிறது. இதனால் ரெய்னா இனிமேல் சென்னை அணிக்கு விளையாடமாட்டார் எனத் தெரிகிறது.