1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 7 மே 2019 (16:34 IST)

சென்னை vs மும்பை குவாலிஃபயர் –அச்சுறுத்தும் மோசமான வானிலை !

சென்னையில் இன்று இரவு நடக்க இருக்கும் முதல் குவாலிஃபயர் போட்டி மழையால்  பாதிக்கப்படுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.

ஐபிஎல் 2019 தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்து இன்று முதல் குவாலிஃபயர் போட்டிகள் தொடங்குகின்றன. முதலாவது குவாலிஃபயரில் இன்று சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இன்று மதியத்தில் இருந்து சென்னையின் சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. தமிழ்நாடு வெதர்மேன் வெப்ப சலனம் காரணமாக சென்னை மற்றும் தமிழகத்தில் சிலப் பகுதிகளில் வெப்பச்சலன மழைப் பெய்யும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மழையால் போட்டி பாதிக்கபப்டுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.