செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 17 மே 2021 (08:04 IST)

இத்தாலி ஓபன் டென்னிஸ்: 10வது முறையாக ரபேல் நடால் சாம்பியன்!

இத்தாலி ஓபன் டென்னிஸ்: 10வது முறையாக ரபேல் நடால் சாம்பியன்!
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இதில் ஆண்கள்  ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரர் ஜோகோவிச் என்பவரை ரபேல் நடாலும் வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார். இது அவருடைய 10வது சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் ரபேல் நடால் கைப்பற்றிய நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டாவது செட்டை 6-1 என ஜோகோவிச்.கைப்பற்றினார் 
 
இதனையடுத்து சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும்  மூன்றாவது செட்டில் ரபேல் நடால் அதிரடியாக விளையாடியதை அடுத்து அவர் 6-3 என்ற செட் கணக்கில் வென்றார். சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் 7-5, 1-6, 6-3  என்ற செட் கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.