புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி போராடி தோல்வி
இன்று நடைபெற்ற புரோ கபடி போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே நன்றாக விளையாடி வந்தபோதிலும் கடைசி நேரத்தில் செய்த சொதப்பலால் தமிழ் தலைவாஸ் அணி 41-39 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா அணியிடம் தோல்வி அடைந்தது
முதல் பாதியில் அபாரமாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி 17-9 என்ற புள்ளி கணக்கில் முன்னணியில் இருந்தது. ஆனால் திடீரென இரண்டாம் பாதியில் சொதப்பியதால் ஒரு கட்டத்தில் பாட்னா அணி 38 புள்ளிகளும் தமிழ் தலைவாஸ் அணி 30 புள்ளிகளுடன் இருந்தது
எனவே தோல்வி நெருங்கியதை போல இருந்தாலும் தமிழ் தலைவாஸ் அணியின் டோங்லி அபாரமாக விளையாடி புள்ளிகளை அதிகரித்தார். கடைசி ஒரு நிமிடம் இருந்தபோது 40-38 என்ற நிலையில் இரண்டு புள்ளிகள் மட்டும் குறைவாக இருந்த தமிழ் தலைவாஸ் அணியால் பின்னர் ஒரே ஒரு புள்ளியை மட்டுமே எடுக்க முடிந்ததால் தோல்வியை தழுவியது.