புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By

கோலிக்காக ’இதை’ வீரர்கள் செய்யவேண்டும்…. ரெய்னா கருத்து!

இந்திய டி 20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலக உள்ளதாக அறிவித்துவிட்டார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டி 20 உலகக்கோப்பையோடு டி 20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்துவிட்டார். இதனால் இந்த உலகக்கோப்பையை எப்படியும் வென்றுவிட வேண்டும் என்ற குறியில் இந்திய் அணி உள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ‘கோலிக்காக வீரர்கள் உத்வேகமாக விளையாடி கோப்பையை வெல்லவேண்டும். ஏனென்றால் கேப்டனாக கோலிக்கு இதுதான் கடைசி உலகக்கோப்பை. இந்த உலகக்கோப்பை தொடரில் துருப்பு சீட்டாக இருக்கப்போகும் மூன்று வீரர்கள் கே எல் ராகுல், ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலிதான். இவர்கள் பெரும்பாலான ஓவர்களை விளையாடினால் வெற்றி எளிதாகும்’ எனக் கூறியுள்ளார்.