புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (15:51 IST)

சச்சினிடம் பதக்கத்தைக் காட்டவேண்டும்… பவினா படேல் விருப்பம்!

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சச்சினை சந்திக்க வேண்டுமென பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற பவீனா படேல் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் நிலையில் அதில் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் பவினாபென் பட்டேல் வெள்ளிப்பதக்கம் வென்றார் என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பவினாபெண் பட்டேலுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பவீனா ’சச்சின்தான் எப்போதும் எனக்கு உத்வேகம் அளித்துள்ளார். அவரை நான் பார்க்கவேண்டும். அவரின் பேச்சு எனக்கு கூடுதல் உத்வேகத்தைக் கொடுக்கும். உலகின் இரண்டாவது வேகமான விளையாட்டு டேபிள் டென்னிஸ். தியானத்தின் மூலமாக எனது மனதை நான் கட்டுப்படுத்துகிறேன்’ எனக் கூறியுள்ளார்.