வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Updated : வியாழன், 12 செப்டம்பர் 2019 (22:51 IST)

கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி: அதிர்ச்சியில் ரசிகர்கள்

புரோ கபடி போட்டி தொடரில் தமிழ் தலைவாஸ் அணி ஒரு சில போட்டிகள் தவிர மற்ற அனைத்துப் போட்டிகளிலும் படு மோசமாக விளையாடி வரும் நிலையில் நேற்று வரை தமிழ் தலைவாஸ் அணி 11வது இடத்தில் இருந்த நிலையில் இன்று கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது 
 
இன்று நடைபெற்ற பாட்னா மற்றும் ஜெய்ப்பூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பாட்னா அணி 36 புள்ளிகளும் ஜெய்ப்பூர் அணி 33 புள்ளிகளும் எடுத்ததை அடுத்து மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் பாட்னா அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து கடைசி இடத்தில் இருந்த பாட்னா அணி 9-வது இடத்திற்கு முன்னேறியது. இதனை அடுத்து பதினோராவது இடத்தில் இருந்த தமிழ் தலைவாஸ் அணி கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது
 
 
இன்று நடைபெற்ற இன்னொரு போட்டியில் பெங்களூரு மற்றும் பெங்கால் அணிகள் மோதின இந்த போட்டியில் பெங்கால் அணி 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பெங்கால் அணி 42 புள்ளிகளும் பெங்களூர் அணி 40 புள்ளிகளும் பெற்றதால் பெங்கால் அணி வெற்றி பெற்றது


இருப்பினும் புள்ளிகள் பட்டியலில் முதல் ஐந்து இடத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை வழக்கம்போல் டெல்லி, பெங்கால், அரியானா, பெங்களூர், மும்பை ஆகிய அணிகள் முதல் ஐந்து இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது