வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 28 டிசம்பர் 2018 (12:51 IST)

காலையில் பூம்ரா; மாலையில் கம்மின்ஸ் – மெல்போர்னில் பவுலர்கள் ராஜ்ஜியம் !!!

மெல்போர்னில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட்டின் 3 ஆவது நாளில் இந்தியா 54 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்துள்ளது.

நேற்று முன் தினம் மொல்போர்னில் தொடங்கிய மூன்றாவது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மயங்க் அகர்வார் (76),கோஹ்லி (82), புஜாரா (106), ரோஹித் (63*) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

அதையடுத்து களமிறம்ங்கிய ஆஸி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து தடுமாறியது.. இந்தியாவின் பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாத ஆஸி பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இந்திய அணியின் சார்பில் துல்லியமாக பந்து வீசிய பூம்ரா 6 விக்கெட்களை சாய்த்தார். ஜடேஜா இரண்டு விக்கெட்களையும், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

291 ரன்கள் பின் தங்கியிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு பாலோ ஆன் கொடுக்காமல் இந்திய அணி தொடர்ந்து பேட் செய்ய முடிவெடுத்து ஆடியது. இந்தியாவிற்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஆஸியின் பேட் கம்மின்ஸ் இந்திய பேட்ஸ்மேன்களை நிலைக் குலையச்செய்தார். துல்லியமாகப் பந்து வீசிய அவர் ஹனுமா விஹாரி (13), புஜாரா (0), கோஹ்லி (0), ரஹானே (1) ஆகியோரை அடுத்தடுத்து அவுட் ஆக்கி வெளியேற்றினார்.ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை ஹேசில்வுட் கைப்பற்றினார்.இதனால் இந்திய அணி 3 ஆம் நாள் ஆட்டமுடிவில் 5 விக்கெட்டுகளி இழந்து 54 ரன்களை சேர்த்துள்ளது. 
 
தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 28 ரன்களுடனும், ரிஷப் பாண்ட் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா தடுமாறினாலும் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடியதால் 346 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.