புதன், 27 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (10:52 IST)

ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் விலகல்… கம்மின்ஸ் மீது கடும் விமர்சனம்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஜஸ்டின் லாங்கர் விலகியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸி அணிக்கு பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் சில ஆண்டுகளுக்கு முன்னர் நியமிக்கப்பட்டார். பால் டேம்ப்பரிங் பிரச்சனைகளில் சிக்கி அந்த அணி தொய்வை சந்தித்த போது பதவியேற்றுக் கொண்டார். அவரின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு முடிவடைய உள்ள நிலையில் அவருக்கும் அணி வீரர்களுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளதாக கடந்த ஒரு வருடமாக சொல்லப்பட்டு வருகிறது.

அதனால்தான் கடந்த சில தொடர்களில் வீரர்கள் சரியாக விளையாடாமல் அவரை பழிவாங்குவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதன் பிறகு அவரின் பயிற்சிக்காலத்தில் ஆஸி அணி கோப்பையை வென்றதை அடுத்து இப்போது திடீரென லாங்கர் பதவி விலகியுள்ளார். அவரின் பதவி காலம் 6 மாதம் நீட்டிக்கப்பட இருந்த நிலையில் இப்போது அவர் பதவி விலகியதற்குக் காரணம் புதிய கேப்டன் பேட் கம்மின்ஸ்தான் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுபற்றி கம்மின்ஸ் தன்னுடைய நிலைபாடு என்ன என்பது பற்றி வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என ஆஸியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.