புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 19 டிசம்பர் 2022 (16:48 IST)

216 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பாகிஸ்தான்: இங்கிலாந்து வெற்றி பெற எளிய இலக்கு!

pak cricket
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்று வரும் மூன்றாவது இறுதி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 216 ரன்களில் ஆட்டமிழந்தது
 
இதனை அடுத்து இங்கிலாந்து அணி வெற்றி பெற 167 ரன்கள் மட்டுமே தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த 17ஆம் தேதி தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது 
 
இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 354 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சில் 216 ரன்களுக்கு ஆட்டமிழந்தது 
 
இதனையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் இன்னும் சில நிமிடங்களில் பேட்டரி செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva