செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 30 ஜூலை 2021 (17:44 IST)

ஒலிம்பிக் போட்டி: இந்திய ஹாக்கி அணி வெற்றி

ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக்-2020 போட்டிகள் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இந்தியாவைச் சேர்ந்த மீரா சானு என்பவர் பளுதூக்குவதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்தார்.

இந்நிலையில், இந்திய பாட்மிண்ட வீராங்கனை பிவி.சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார்.

தற்போது, டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி லீக் போட்டியில் ஜப்பான் நாட்டை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.  ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி 5-3 என்ற கோல் கணக்கில் அசத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றிற்கு முன்னேறியுள்ளது.