1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Ashok
Last Modified: திங்கள், 23 நவம்பர் 2015 (15:37 IST)

ஏடிபி உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்

செர்பியா நாட்டைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் உலகச் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டி.யில் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி உலகச் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.


 
 
உலகச் சாம்பியன்ஷிப் என்று சொல்லப்படும் ஏடிபி சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதி ஆட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் முதல் நிலை வீரரான ஜோகோவிச், சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடர்ருடன் மோதினார். 

இந்நிலையில், கடந்த லீக் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தியதால், ரோஜர் ஃபெடரர் வெற்றி பெருவார் என்ற நம்பிக்கையுடன் அவருடன் விளையாடினார். 
 
விருவிருப்பாக நடந்த இறுதி போட்டியில் ஃபெடரரின் சவாலை முறியடித்த ஜோகோவிச் , 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இதன் மூலம் உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐந்தாவது முறையாக ஜோகோவிச் பட்டம் வென்றார். தொடர்ச்சியாக அவர் வெல்லும் நான்காவது பட்டமாகும்.