128 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து.. நியூசிலாந்து அபார வெற்றி..!
நேற்று நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து ஐந்து விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரரான ஃபின் அலென் 83 ரன்கள் அடித்தார் என்பதும் கிளன் பிலிப்ஸ் அதிரடியாக 69 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 203 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி இங்கிலாந்து அணி 18.3 ஓவர்களில்128 ரன்களுக்கு அனைத்துக் விக்கெட்டுக்களையும் இழந்ததால் நியூசிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றி பெற்றது.
ஏற்கனவே இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளில் வென்று இருக்கும் நிலையில் இந்த தொடரில் தற்போது 2-1 என்ற புள்ளி கணக்கில் இங்கிலாந்து அணி முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva