வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 27 மே 2021 (12:57 IST)

கேன் வில்லியம்சனை ரஹானேவோடு ஒப்பிடலாம்… கோலியோடு அல்ல – பானேசர் பதில்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நடக்க உள்ள நிலையில் கேன் வில்லியம்சன் மற்றும் கோலிக்கு இடையிலான ஓப்பீடு பேச்சு சலசலப்பை எழுப்பி வருகிறது.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹ்ன் உலகின் சிறந்த கிரிக்கெட்டர் கோலியா வில்லியம்சனா என்ற சர்ச்சையை சில வாரங்களுக்கு முன்னர் கிளப்பிவிட்டார். அதற்கு பல முன்னாள் வீரர்களும் பதிலளித்து வருகின்றனர். அந்த வகையில் இங்கிலாந்தின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளரும் இந்திய வம்சாவெளியை சேர்ந்தவருமான மாண்ட்டி பேனாசார் அளித்துள்ள பதில் ‘ கேன் வில்லியம்சன் மற்றும் கோலி ஆகிய இருவருமே சிறந்த வீரர்கள்தான். டி20, ஒருநாள் தொடர்களில் விராட் கோலி மிகச்சிறந்த முறையில் இலக்குகளை விரட்டி வெற்றி ஈட்டக் கூடியவர். வில்லியம்சனை ரோஹித் ஷர்மாவை விட ஒரு படி மேல் எனலாம். அவர் இந்தியாவில் பிறந்திருந்தால் ரஹானே இடத்தை பிடித்திருப்பார். அதனால் அவரை கோலியோடு ஒப்பிட முடியாது’ எனக் கூறியுள்ளார்.