1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 13 ஜூலை 2018 (21:03 IST)

ரஜினியிடம் வாழ்த்து பெற்ற கிரிக்கெட் வீரர்கள்

தமிழ்நாடு பிரிமியர் லீக் என்ற டி.என்.பி.எல் போட்டிகள் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம் நடைபெற்ற முதல் போட்டியில் திண்டுக்கல் அணியை திருச்சி அணி 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்த நிலையில் இன்று திண்டுக்கல் மற்றும் மதுரை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த மதுரை அணியினர் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 169  ரன்கள் எடுத்துள்ளனர். இன்னும் சிறிது நேரத்தில் திண்டுக்கல் அணியினர் பேட்டிங் செய்ய உள்ளனர்.
 
இந்த நிலையில் இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை அணி வீரர்கள் சென்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதுமட்டுமின்றி வீரர்கள் அனனவரும் ரஜினியுடன் குரூப் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.  சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்தை சந்தித்தது மகிழ்ச்சி அளித்தாக லைகா கோவை கிங்ஸ் அணி கேப்டன் முகுந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்