செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 9 ஏப்ரல் 2018 (08:24 IST)

பெங்களூர்-கொல்த்தா போட்டி: வெற்றி பெற்றது யார்?

ஐபிஎல் போட்டியில் இன்று நடந்த இரண்டாவது போட்டியில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச செய்ய முடிவு செய்ததால் பெங்களூர் அணி பேட்டிங் செய்தது அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 176 ரன்கள் எடுத்தது. மெக்கல்லம் 43 ரன்களும், டிவில்லியர்ஸ் 44 ரன்களும், மந்தீப்சிங் 37 ரன்களும் எடுத்தனர். கேப்டன் விராத் கோஹ்லி 31 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நரேன் 50 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.