1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 25 மே 2018 (20:51 IST)

இறுதி போட்டிக்கு தகுதி பெற கொல்கத்தாவிற்கு 175 ரன்கள் தேவை

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் கிளைமாக்ஸ் நெருங்கிவிட்ட நிலையில் சென்னை அணியுடன் இறுதி போட்டியில் மோதுவது யார்? என்பதை நிர்ணயிக்கும் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மோதி வரும் இந்த போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
 
முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 174 ரன்கள் எடுத்துள்ளத். சஹா 35 ரன்களும், தவான் 34 ரன்களும்,ஷாகிப் அல்ஹசன் 28 ரன்களும் எடுத்தனர். ரஷித்கான் கடைசி நேரத்தில் 10 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அதிரடி கட்டினார். 
 
இந்த நிலையில் இறுதி போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 175 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.