1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (21:50 IST)

செஞ்சுரியை நெருங்கும் கே.எல்.ராகுல்: இவராவது செஞ்சுரி அடிப்பாரா?

இன்று ஆரம்பித்துள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் மிக அபாரமாக விளையாடி செஞ்சுரி நெருங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஒருவரான ரோகித் சர்மா 83 ரன்களில் அவுட்டான நிலையில் தற்போது கேப்டன் விராத் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் விளையாடுகின்றனர் 
 
கேஎல் ராகுல் மிக அபாரமாக விளையாடி தற்போது 78 ரன்கள் அடித்து உள்ளார். இன்னும் 22 ரன்கள் அடித்தால் செஞ்சுரி என்ற நிலையில் அவர் நிதானமாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா இன்றைய போட்டியில் செஞ்சூரியை மிஸ் செய்த நிலையில் கேஎல் ராகுல் செஞ்சுரி அடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்