20 ஓவர் போட்டியில் தோனி இடம்பெறாதது ஏன்? கோலி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்
20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் தோனி இடம் பெறாதது ஏன் என கேப்டன் கோலி விளக்கமளித்திருக்கிறார்.
இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 அணியை பிசிசிஐ அறிவித்தது. அந்த அணியின் கேப்டனாக கோலியும், துணை கேப்டனாக ரோஹித் சர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் நிரந்தமாக இருக்கும் தோனியின் பெயர் இடம்பெறவில்லை.
இதனால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர். பலர் பிசிசிஐ ஐ கடுமையான விமர்சனம் செய்த வண்ணம் இருக்கின்றனர்.
இந்நிலையில் விராட் கோலி, 20 ஓவர் போட்டியில் தோனி இடம்பெறாதது ஏன் என்பது குறித்து கூறியுள்ளார். அதில் தோனியிடம் பிசிசிஐ கலந்து பேசிவிட்டே இந்த முடிவை வெளியிட்டிருக்கிறார்கள்.
தோனி இளம் வீரர்கள் அதிக வாய்ப்பு பெற்றால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறார். தோனி இந்திய அணியின் அசைக்க முடியாத நம்பிக்கை. எனவே யாரும் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.