1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 29 ஜூன் 2019 (15:37 IST)

விஜய் சங்கரை மட்டும் நீக்கிடாதிங்க – கோஹ்லிக்கு இங்கிலாந்து வீரர் அறிவுரை !

நாளை இங்கிலாந்துக்கு எதிராக நடக்க இருக்கும் போட்டியில் இருந்து இந்திய ஆல்ரவுண்டர் விஜய் சங்கரை நீக்கக் கூடாது என கெவின் பீட்டர்ஸன் தெரிவித்துள்ளார்.

உலககோப்பை அணிக்கான பட்டியலில் விஜய் ஷங்கரின் பெயர் இடம்பெற்றதில் இருந்தே சர்ச்சைகளை சந்திக்க தொடங்கியது. அம்பாத்தி ராயுடு நான்காம் இடத்தில் சிறப்பாக விளையாடி வந்தாலும் அவருக்கு பதிலாக விஜய் சங்கரை எடுத்தது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது. இந்திய அணி முன்னாள் வீரரான கம்பீர் உட்பட பலர் இதற்கு எதிராகக் கருத்துகளைக் கூறினர்.

ஆனால் பிசிசிஐ- ஓ விஜய் சங்கர் ஒரு 3டி வீரர் என சொல்ல, அதற்கு அம்பாத்தி ராயுடு வீட்டில் மேட்ச் பார்க்க 3டி கண்ணாடி வாங்கியுள்ளேன் எனத் தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார். இந்நிலையி உலகக்கோப்பையில் இதுவரை விஜய் சங்கர் இதுவரை தனது திறமையை நிரூபித்து தனது தேர்வை நியாயப்படுத்தவில்லை. அதனால் நாளையப் போட்டியில் அவர் நீக்கப்பட்டு ரிஷப் பண்ட்டோ அல்லது தினேஷ் கார்த்திக்கோ சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்துப் பலரும் பலவிதமானக் கருத்துகள் கூறி வரும் நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் டிவிட்டரில் ‘அன்பான விராட் கோஹ்லி மற்றும் ரவி சாஸ்திரி… தயவு செய்து விஜய் சங்கரை நீக்கிவிடாதீர்கள்..அவர் கொஞ்சம் கொஞ்சமாக தனக்கான இடத்துக்கு வந்துகொண்டிருக்கிறார். அவர் கண்டிப்பாக நாளையப் போட்டியை வெல்ல உறுதுணையாக இருப்பார். பண்ட்டை தேர்வு செய்வது பற்றி நினைக்காதீர்கள்.. அவருக்கு இன்னும் குறைந்தபட்சம் மூன்று வாரமாவது வேண்டும் உலகக்கோப்பையில் விளையாட’ எனத் தெரிவித்துள்ளார்.