தலைக்கீழாக பந்து வீசும் விநோத பவுளர்: வைரலாகும் வீடியோ!!
மலேசியாவில் நடைபெற்று வரும் 19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடரில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் இலங்கை வீரர் ஒருவர்.
இலங்கை வீரர் கெவின் கோத்திகோடா என்பவர் தனது வித்தியாசமான் பந்துவீசும் திறமையால் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளார்.
இவரது பவுளிங் ஸ்டைல் தென் ஆப்ரிக்க பவுளர் ஆடம்ஸ் போன்று உள்ளதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆடம்ஸ் தென் ஆப்ரிக்க அணிக்காக 1995 முதல் 2005 வரை விளையாடினார்.
இவர் 45 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1345 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவரது பவுளிங் பேட்ஸ்மென்களை திணறவைக்குமாம்.
இதே போல் பவுள் செய்யும் இலங்கை வீரர் களமிறங்கிய முதல் போட்டியில் வித்தியாசமான முறையில் பந்தினை வீசியதால் பேட்ஸ்மேன்கள் ரன்களை சேர்க்க முடியாமல் திணறினர்.
ஆனால் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் எளிதில் ரன்களை சேர்க்க துவங்கினர். இவரது பந்து வீசும் முறை பார்ப்பதற்கு கடினமாக தெரிந்தாலும், இவரது ஓவரில் எளிதாக ரன்களை சேர்க்க முடிந்தது என தெரிவித்துள்ளனர்.