வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 17 மார்ச் 2021 (09:02 IST)

சச்சினும் கோலியும் கிரிக்கெட்டின் மூலம் பணக்காரர்கள் ஆகிறார்கள்… கபில்தேவ் கருத்து!

கால்ப் சங்கத்தில் உறுப்பினராக இணைந்துள்ள முன்னாள் கேப்டன் கபில்தேவ் இளைஞர்களிடையா கால்ஃப் விளையாட்டை பிரபலப்படுத்துவேன் எனக் கூறியுள்ளார்.

புரொபஷனல் கால்ஃப் டூர் ஆஃப் இந்தியாவின் வாரிய உறுப்பினராக கபில் தேவ் சில தினங்களுக்கு முன்னர் இணைந்தார். இதையடுத்து இளைஞர்கள் இடையே கால்ப் விளையாட்டை பிரபலப்படுத்துவதுதான் தனது நோக்கம் என அவர் கூறியுள்ளார். மேலும் கால்ப் விளையாட்டின் மூலம் இளைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை விதைப்பேன் எனவும் கூறியுள்ளார்.

இதுபற்றி பேசிய அவர் ‘விராட் கோலியும், சச்சின் டெண்டுல்கரும் கிரிக்கெட் மூலம் பணக்காரர்கள் ஆக முடியும் என்றால் ஒரு திறமையான கால்ஃப் வீரரால் ஏன் ஆக முடியாது?. இந்த விளையாட்டுக்குள் பண  முதலீட்டைக் கொண்டுவந்தால் அதை எளிதாக செய்யலாம். ’ எனக் கூறியுள்ளார்.