1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 10 ஜனவரி 2023 (16:59 IST)

ஐபிஎல் போட்டிகளை இலவசமாக ஒளிபரப்பு ஜியோ.. விளம்பரதாரர்கள் அதிர்ச்சி!

ipl
சமீபத்தில் உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தை ஜியோ இலவசமாக ஒளிபரப்பிய நிலையில் ஐபிஎல் போட்டிகளையும் இலவசமாக ஒளிபரப்ப ஜியோ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
இதனால் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை கோடிக்கணக்கில் கொடுத்து வாங்கிய தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் விளம்பரதாரர்களுக்கு அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
ஐபிஎல் போட்டிகளை இலவசமாக 11 மொழிகளில் ஒளிபரப்ப ஜியோ சினிமா திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் 600 மில்லியன் வாடிக்கையாளர்கள் பயன் பெறுவார்கள் என்றும் ஜியோ நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
ஐபிஎல் போட்டி ஒளிபரப்பு உரிமையை வாங்கிய தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் விளம்பரங்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran