வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (22:22 IST)

டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட் எடுத்து ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முதன் முதலாக 600 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

இதில் மூன்றாவது நாளாக இன்று பந்துவீச்சில் ஈடுபட்ட இங்கிலாந்து அணி வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன்  பாகிஸ்தான் கிரிக்கெட் அணிய்ன் கேப்டன் ஆஜர் அலிகானை அவுட் செய்ததன் மூலம்  டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முதன் முதலாக 600 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இதையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.